
posted 8th February 2023
புதிய நம்பிக்கையாளர் தெரிவு தேர்தலுக்குப் பின்னர் நடத்தவும்
எதிர்வரும் மாதம் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறவுள்ள புதிய நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வது பொதுக்கூட்டங்களை நடத்துவது தேர்தலின் பின்னர் நடத்துமாறு முஸ்லீம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
முஸ்லீம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சற்.ஏ.எம். பைசல் அவர்கள் நம்பிக்கையாளர்கள் , நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் . அனைத்து பள்ளிவாசல் , தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்கள் யாவருக்கும் 2023.02.07 திகதியிடப்பட்ட கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;
உள்ளுராட்சி மன்றத்தேர்தல் எதிர்வரும் 2023.03.09ம் திகதி நடைபெறவுள்ளதால் அனைத்து பள்ளிவாசல்கள் , தக்கியாக்கள் மற்றும் சாவியாக்களில் நடைபெறவுள்ள புதிய நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான (சாதாரண தெரிவு அல்லது இரகசிய வாக்கெடுப்பு) பொதுக்கூட்டங்களை உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவினர் தங்களின் 2023.02.06ம் திகதி வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
எனவே அனைத்து பள்ளிவாசல், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதினை தவிர்த்து கொள்வதுடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.