
posted 8th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆழ்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த பாரியபடகு ஒன்று கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டது. இச் சம்பவம் காரைதீவில் 05.03.2023 இடம்பெற்றது. காரைதீவுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆழ்கடல் படகு கடந்த வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
காரைதீவைச் சேர்ந்த எஸ் . கிருஷ்ணமூர்த்தி என்பவரின் பாரிய படகே இவ்விதம் கடலில் சேதத்திற்குள்ளாகியது. சேதம் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக இன்னும் தெரியவில்லை. விபத்துக்குள்ளான பாரிய படகு வலைகளோடு கடலுக்குள் மூழ்கிய வண்ணம் இருந்தது .
முதலில் அன்றைய தினம் பல சிரமங்களின் மத்தியில் வலைகள் கரைக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் மூழ்கிக் கொண்டிருந்த பாரிய படகை படகு உரிமையாளர் மற்றும் அவரது குழுவினர் காரைதீவு கடற்படையினருடன் இணைந்து ஆழ்கடலுக்குச் சென்று பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு மீட்டனர். படகு பாரிய சேதத்திற்குள்ளாகி இருந்தது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)