
posted 11th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நெல் அறுவடை துரிதம்
அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் வேளாண்மை அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அண்மையில் பொழிந்த மழை காரணமாக, அறுவடை சற்று சிரமத்திற்குள்ளாகி தடைப்பட்டிருந்தது. தற்போது வெயில் எறிக்கின்ற காரணத்தினால், அறுவடை வழமைக்கு திரும்பியது. அறுவடை இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை இடம் பெறுகிறது.
அதேவேளை, அறுவடை செய்யப்பட்ட நெல்லை பிரதான மற்றும் உள்ளூர் வீதிகளில் உலரவைப்பதனால் போக்குவரத்து பிரச்சனை தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக பிரதான வீதிகளில் நெல் உலர வைப்பதால் இன்னோரன்ன பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அதேவேளை, நெல்லை உலரவைக்க பொதுவான இடங்கள் போதுமான பரப்புடன் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)