நீலநண்டு உற்பத்திக்கு உதவும் எம்டீஎவ் நிறுவனம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

2015 ஆண்டு தொடக்கம் அவுஸ்ரேலியா நிதி உதவியுடன் எம்டீஎவ் நிறுவனம் இலங்கையில் விவசாயம் மீன்பிடி மற்றும் உல்லாசப் பயணிகள் இவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தற்பொழுது கடற்தொழில் அதாவது மீன்பிடியாளர்கள் மத்தியில் நீல நண்டு விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

ஆகவே இன்று (புதன்கிழமை, 08) நாங்கள் மன்னார் பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு இங்குள்ள மீனவர்களுக்கு இந்த விடயத்தில் என்ன செய்ய வேண்டும் மற்றும் மீனவர்களின் கருத்துக்களை முதற்கட்டமாக அறிந்து கொள்வதற்காகவே இக் கூட்டம் கூட்டப்பட்டது.

மன்னாரில் நண்டு கொள்முதல் செய்வதில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு அதிகமான கம்பனிகள் அக்கறைக்காட்டத் தொடங்கின.

இதன் பிற்பாடே இங்கு நண்டுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. அன்றையக் காலக்கட்டத்திலிருந்து அவுஸ்ரேலியா நிதி திட்டத்தின் கீழ் சந்தைப்படுத்தல் நிறுவனம் அதாவது எம்டீஎவ் நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே தற்பொழுது இந் நிறுவனம் மன்னார் மீனவ சமூகத்துக்கு உதவி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்களை மேற்கொண்டுள்ளது.

ஆகவே மன்னார் கடற்தொழில் திணைக்களத்தின் துணை கொண்டு இதில் முதல் கட்டமாக கிராமிய மீனவ அமைப்புக்ளில் நிதி முகாமைத்துவம் , மீன்பிடி எவ்வாறு அமைந்துள்ளது , ஏற்றுமதிகள் மீனவ பிரச்சனைகள் என்பவற்றை ஆய்வுசெய்து எமது நிறுவனம் எந்தவிதத்தில் நீல நண்டு உற்பத்தி செய்வதும், அவற்றை கொள்முதல் செய்வதும் தொடர்பாக ஆய்வை மேற்கொள்ளுகின்றோம்.

நீலநண்டு தொடர்ந்து பல வருடங்களுக்கு பிடிக்கக் கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்ற ஒரு தூரநோக்கு சிந்தனையில் இத் திட்டம் முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என இக் கூட்டத்தில் தெரிவிக்க்பட்டது.

இக் கூட்டமானது எம்டீஎவ் நிறுவன அதிகாரிகளுடன் கடற்தொழில் திணைக்களத்திற்கு உட்பட்ட கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தலைமை காரியாலய அலவலர்களுடனும் புதன்கிழமை (08) காலை மன்னார் கடற்தொழில் திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது.

நீலநண்டு உற்பத்திக்கு உதவும் எம்டீஎவ் நிறுவனம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)