
posted 6th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer Article Section:
மன்னார் மாவட்டத்தில் மிகவும் மக்களால் ரசித்து பார்க்கப்பட்டு வந்த காத்தவராயன் கூத்து நீண்ட இடைவெளிக்குப்பின் இவ்வருடம் மீண்டும் அரங்கேற்றப்பட இருக்கின்றது.
மன்னார் மாந்தை மேற்கு கலை இலக்கிய மன்றத்தின் கலைஞர்கள் நடிப்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் இக் கூத்தானது இரண்டு இரவுகள் கொண்ட நிகழ்வாக அமைய இருக்கின்றது.
தமிழரின் பாரம்பரிய கலை வடிவம் கொண்ட இக் கூத்ததானது எதிர்வரும் சித்திரை மாதம் 21, 22 வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களே மாந்தை மேற்கு பிரதேச சபை பொது மைதானத்தில் அரங்கேற்றப்பட இருக்கின்றது.
இந்த அரகேற்றத்திற்கான ஒத்திகை இதன் கலைஞர்களால் ஜனவரி மாதம் முதல் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)