நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதிய சட்டவிரோத மணல் வாகனம்

சட்டவிரோதமாக மண்ணை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் ஒன்றுடன் மோதியதில் அந்த வாகனம் உருண்டு முன்னாலுள்ள தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதியதில் கம்பம் முறிவடைந்துடன் அருகிலுள்ள மதிலிலும் அவ் வாகனம் மோதியுள்ளது.

குறித்த சம்பவம் புதன் (08) பிற்பகல் 6:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது;

இன்று (08) பிற்பகல் மந்திகை புற்ரறளை பகுதியில் வீடு ஒன்றில் அகம் ரீவீ cctv இணைப்பை சரிபார்ப்பதற்காக வாகனத்தில் வந்தவர்கள் தமது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அகம் ரீவியை சரி பார்த்துக் கொண்டிருந்த வேளை அப்பகுதியால் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது மோதியது. அவ்வேளை அந்த வாகனம் உருண்டோடி முன்னால் இருந்த தொலைத்தொடர்பு கம்பத்தின் மீதும், குறித்த வீட்டு மதில் மற்றும் பாடசாலை பெயர் பலகையிலும் மோதித் தள்ளியது.

வாகனத்தின் மீது மோதியது. அவ்வேளை அந்த வாகனம் உருண்டோடி முன்னால் இருந்த தொலைத்தொடர்பு கம்பத்தின் மீதும், குறித்த வீட்டு மதில் மற்றும் பாடசாலை பெயர் பலகையிலும் மோதித் தள்ளியது.

இதனால் தொலைத் தொடர்பு கம்பம் முறிவடைந்துள்ளதுடன் மதிலும் ஒருபகுதி இடிந்து வீழ்ந்துள்ளதுடன் பாடசாலை ஒன்றின் வழி விளம்பரப் பலகையும் இடித்து நொருங்கியதுடன் வாகனமும் பலத்த சேதத்திற்க்கு உள்ளாகியுள்ளது.

நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதிய சட்டவிரோத மணல் வாகனம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)