தெய்வங்களையே பழிவாங்கும் படைப்புக்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தெய்வங்களையே பழிவாங்கும் படைப்புக்கள்

தொல்பொருள் திணைக்களம் பௌத்த மயமாக்கலுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்ந்து தெரிவிக்கையில்;

கடந்த மூன்று வருடங்களாக வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதையும், திருவிழாக்கள் செய்வதையும் தொல்பொருள் திணைக்களம் ஊடாக பொலிஸார் தடை விதித்து இருந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இங்கு திருவிழா செய்ய முடியாமல் இருந்த சூழ்நிலையை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது மூன்று தினங்களுக்கு முன்பு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் இருக்கும் அனைத்து விக்கிரங்களும் உடைத்து எறியப்பட்டுள்ளது. குறித்த இந் நடவடிக்கையானது படைத்தரப்பினரால் இடம் பெற்றுள்ளதாக அறிகின்றேன்.

தொல்பொருள் திணைக்களத்தில் உதவியுடன் வெடுக்குநாறி மலையை பௌத்த மயமாக்கி, அதனை விகாரையாக்குவதற்காக அவர்கள் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு மேல் முயற்சி செய்து வருகிறார்கள்.

இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து நான் எனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.

அதே போல் வடக்கு - கிழக்கில் இருக்கும் தமிழர்களின் மத கலாச்சார அடையாளங்களை அழித்து மிக தீவிரமாக பௌத்த மயமாக்க நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

எனவே, குறித்த இவ்வாறான செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொல்பொருள் திணைக்களம் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் குறித்த செயல்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயம் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டமைக்கு எதிராக எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமை (நாளை) காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து வவுனியா மாவட்டச் செயலகத்தை வந்தடைய உள்ளது. எனவே, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம் பௌத்த மயமாக்கலுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தெய்வங்களையே பழிவாங்கும் படைப்புக்கள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)