
posted 26th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் யூபிலி விழா
இலங்கையிலிருந்து உகண்டா நாட்டுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தொண்டாற்றிவரும் திருக்குடும்பம் கன்னியர் சபையைச் சார்ந்தவரும் ஊர்காவத்துறை கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்டவரான அருட்சகோதரி மேரி ஜாக்குலீன் ஆசீர்வாதம் தனது சபையில் துறவறத்துக்கான நித்திய வாக்குத்தத்தம் வழங்கிய 25 வது ஆண்டு யூபிலியை உகண்டாவில் அப்பகுதி மக்களுடன் கொண்டாடியுள்ளார்.
இவர் 1998.03.25 ந் திகதி தனது துறவற வாக்குத்தத்தை கொடுத்துள்ளார். இவர் தனது இறைபணித் தொண்டை இலங்கையிலும், வெளிநாட்டிலும் மேற்கொண்டுள்ளார்.
இலங்ககையில், வன்னி, அக்கராயன், உருத்திரபுரம், மட்டக்களப்பு, மிருசுவில், வேறுவில், தலைமன்னார், அப்புத்தளை ஆகிய இடங்களில் தொண்டாற்றியதுடன், தற்பொழுது வெளிநாடாகிய உகண்டாவில் அங்குள்ள பின்தங்கியுள்ள பகுதியில் தனது சேவையை ஆற்றி வருகின்றார்.
அத்துடன் நேற்று சனிக்கிழமை (25) திருக்குடும்பக் கன்னியர் சபையைச் சார்ந்த மன்னார் நானாட்டான் கிராமத்தைச் சார்ந்த அருட்சகோதரி றெஜினா அந்தோனிப்பிள்ளை, யாழ் மண்டத்தீவு கிராமத்தைச் சார்ந்த அருட்சகோதரி ரஞ்சினி பாலசிங்கம் ஆகியோரும் இவ்யூபிலி விழாவை கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)