தலைவர் ரிஷாட் வருகை

தலைவர் ரிஷாட் வருகை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து கட்சி முக்கியஸ்த்தர்கள், ஆதரவாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், பொது மக்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்குகளிலும் தற்போதய அரசியல் நிலமைகள் தொடர்பாக உரையாற்றி தெளிவூட்டினார். குறிப்பாக இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று சந்தித்துக் கௌரவமளித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில், சம்மாந்துறை, கல்முனை, மாளிகைக்காடு உட்பட மாவட்டத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களுக்கும் அவரது வருகை அமைந்திருந்தது.

இவ்வாறு பல்வேறு பிரதேசங்களுக்கும் வருகை தந்த தலைவர் ரிஷாட் பதியுதீன் கருத்து வெளியிடுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ{க்கான ஆதரவு முஸ்லிம் மக்கள் மத்தியில் அபரிமிதமாக அதிகரித்திருப்பதாகவும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமானால் அதி கூடிய வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெறுமெனவும் தெரிவித்த அவர், இந்த மாவட்டத்தில் முன்னரைவிடவும் கூடிய சபைகளில் தமது கட்சி ஆட்சி அமைக்குமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

உள்ளுராட்சித் தேர்தலால் நாட்டுக்கு நன்மை கிடைக்காதென்று நீலிக்கண்ணீர் வடிப்போர், தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் எழுப்பப்படும் குரல்களை உதாசீனம் செய்தே வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவு, சர்வதேசநாடுகளின் கோரிக்கைகள், தேசிய சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்குக் கூட இந்த விடயத்தில் அரசு செவிசாய்க்கவில்லையெனவும் அவர் விசனம் தெரிவித்தார்.

தலைவர் ரிஷாட் வருகை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)