
posted 10th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தலைமன்னாரில் 03 கிலோவுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் மூவர் கைது
மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து தலைமன்னார் பழையப் பாலம் பகுதியை பொலிசார் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தியபோது சந்தேக நபர் ஒருவர் கேரளா கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் வியாழக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்;
சம்பவம் அன்று மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பழையப் பாலம் பகுதியை மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்தவின் பணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் பிரபாத்விதானகே வின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட குற்றதடுப்பு தற்காலிக பொறுப்பதிகாரி உ.பொ.ப. யெயவர்த்தன பொ.சா.36501 ரத்னமணல தலைமையிலான பொலிஸ் குழுவினர் அப்பகுதியை திடீரென சுற்றிவளைத்து தேடுதல் நடாத்திபோது 210 கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் (வயது 27) கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்துடன் மேலும் இன்னொருவர் இதேப் பகுதியில் இதே நாளில் ஒரு கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவுடனும் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரும், அத்துடன் இதே தினம் இதே தலைமன்னார் பழையப் பாலம் பகுதியில் இன்னுமொருவர் 2 கிலோ 170 கிராம் கேரளா கஞ்சாவுடன் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரும், மொத்தமாக ஒரே நாளில் ஒரே இடமாகிய தலைமன்னார் பழைய பாலம் பகுதியில் இதே பொலிஸ் குழுவினர் மூன்று சந்தேக நபர்களுடன் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரனையை மேற்கொண்டபின் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளையும் சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)