
posted 7th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குத் தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாடளாவிய ரீதியில் இலங்கை தரமுகாமைத்துவ நிறுவனத்தால் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 69 நிறுவனங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் 400இற்கும் மேற்பட்ட குழுக்களுக்கிடையே போட்டி நடத்தப்பட்டு வழங்கப்பட்ட விருது வழங்கும் விழாவில் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குத் தங்க விருது வழங்கப்பட்டது.
இதன்போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் மற்றும் தரமுகாமைத்துவ பிரிவு வைத்தியரும், களுதாவளை ஆரம்ப மருத்துவச் சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான குகதாசன் மயூரேஷன் தலைமையிலான குழுவில் தாதிய பரிபாலகர் சுகிர்தராணி ஜெயரட்ணம், தொற்று நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பு தாதி உத்தியோகஸ்தர் சுதர்ஜினி ஜீவன் மற்றும் தரமுகாமைத்துவ பரிவு பொறுப்பு தாதி உத்தியோகஸ்தர் தனுசா பிரசாந் மற்றும் சிற்றூழியர் மேற்பார்வையாளர் ஜெயசீலன் கிரிதரன் ஆகியோர் மேற்படி வைத்தியசாலை சார்பாகக் கலந்து கொண்டு தங்க விருதைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)