
posted 13th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சிரமதானப் பணிகள்
யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒழுங்கமைப்பில் நேற்று (12) ஞாயிற்றுகிழமை காலை 7.00 மணியளவில் கொட்டடி முத்தமிழ் கிராமத்தில் டெங்கு சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பொதுமக்களுடன் இணைந்து பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வு யாழ் மாநகர பதில் முதல்வர் ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி, முத்தமிழ் கிராம பொது சுகாதாரப் பரிசோதகர் பா. சஞ்சீவன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகளின் பிரசன்னத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு டெங்கு பரவும் வாய்ப்புள்ள இடங்களை துப்பரவு செய்ததுடன், கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மாநகர கழிவகற்றும் பிரிவினர் மூலம் உடனடியாக அகற்றப்பட்டன.
அத்துடன் மாநகரசபை அறிவித்தல் வாகனத்தின் மூலம் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திலீப் லியனகே, யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி இருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)