செயலமர்வு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

செயலமர்வு

கிழக்கு மாகாண காணி பிரச்சனை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில் மக்கள் காணி ஆணைக்குழுவின் அறிக்கை சிபாரிசு செய்வதற்கு கிழக்கு மாகாண மட்டத்தில் உள்ள பல்லின அரசியல் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு அம்பாறை, நிந்தவூர் பகுதியில் உள்ள அட்டப்பளம் தனியார் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த செயலமர்வை காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி மற்றும் மனித எழுச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

காணி தொடர்பிலான பல்வேறு விளக்கவுரைகள் வளவாளர்களால் வழங்கப்பட்டு இச்செயலமர்வில் கருத்துரைகள் பல முன்வைக்கப்பட்டன.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம் நௌஸாத், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி, முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செயலமர்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)