சுதந்திர தினத்தில்  8 கைதிகள் விடுதலை

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (04) சனிக்கிழமை யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

75ஆவது சுதந்திர தினமான நேற்றைய தினம் பல்வேறு குற்றங்களின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 622 கைதிகளுக்கு அவர்களின் குற்றங்களின் தன்மை - சிறையில் அவர்களின் நடத்தை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது.

இவ்வாறு மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களில் 7 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியுமாக 8 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனைக் கைதிகள்என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தில்  8 கைதிகள் விடுதலை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)