சுகாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம் -  வைத்திய கலாநிதி (திருமதி) என். நிஷாந்தினி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சுகாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம் - வைத்திய கலாநிதி (திருமதி) என். நிஷாந்தினி

சுகாதார துறையில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக காணப்படுகின்றபோதும் நிர்வாக கட்டமைப்பு என்று பார்க்கும்போது உயர்ந்த நிலைக்கு வருகின்ற பெண்களின் சத வீதம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. என மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி என். நிஷாந்தினி அவர்கள் தெரிவித்தார்.

சனிக்கிழமை (11) மன்னார் 'மெசிடோ' நிறுவனம் மன்னாரில் மகளிர் தினத்தை மிக விமரிசையாக மன்னார் நகர சபை மண்டபத்தில் கொண்டாடியது.

இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி என். நிஷாந்தினி இங்கு மருத்துவமும் மகளிர் என்ற தலைப்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

நான் பெருமையாக கூறுவது இலங்கையிலும் சரி மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் பொறுத்த மட்டிலும் சரி சுகாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் அதிகம்.

அதாவது 62 வீதமான மகளிர் சுகாதாரத் துறையில் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். 2012 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியத்தின் கணக்கெடுப்பின்படி மருத்துவம் போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 வீதம் தொடக்கம் 70 வீதமான பெண்கள் மருத்துவம் , பல் மருத்துவம் இணைந்த மருத்துவ சேவைகளில் இருக்கின்றார்கள்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 95 வீதமானவர்கள் பெண்களே சேவையில் ஈடுபாடு கொண்டவர்காக இருக்கின்றார்கள்.

அத்துடன் சுகாதாரப் பணி உத்தியோகத்தர்களாக மன்னார் வைத்தியசாலையில் 80 வீதமானவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர்.

சுகாதார பகுதியில் இவ்வாறாக இருக்கின்றபோதும் நிர்வாக கட்டமைப்பு என்று பார்க்கும்போது உயர்ந்த நிலைக்கு வருகின்ற பெண்களின் சத வீதம் மிகக் குறைவாகவே இருக்கின்றது.

ஆனால் மன்னார் மாவட்டம் பெருமை கொள்ளுகின்றது, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக ஒரு பெண்மணியே காணப்படுகின்றார்.

மகளிர் தினத்தை மகளிர்களால் கொண்டாடுவதைவிட இத் தினத்தை ஆண்கள் கொண்டாடுவார்களானால் அது மிகவும் பெருமைகுரியதாகவும், சிறப்பு கொண்டதாகவும் இருக்கும்.

இந்த 'மெசிடோ' நிறுவனத்தின் தலைவர் ஒரு ஆணாக இருந்து இவ்விழாவை முன்னெடுத்துச் செல்வது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றது.

இதற்காக நான் பெண்கள் சார்பில் அவருக்கு நன்றியை நவிழ்ந்து நிற்கின்றேன். அத்துடன் தந்தையாக , தணயனாக, குருவாக, தோழர்களாக, கணவனாக, மகனாக இருந்து எமக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் மகளிர் தினத்தின் எமது நன்றி உரித்தாகட்டும் என தெரிவித்தார்.

சுகாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம் -  வைத்திய கலாநிதி (திருமதி) என். நிஷாந்தினி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)