சிறுதுளி பெரும் வெள்ளமாக கிடைப்பதால் சங்கத்தின் குறை நீக்கப்படுகின்றது

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிறுதுளி பெரும் வெள்ளமாக கிடைப்பதால் சங்கத்தின் குறை நீக்கப்படுகின்றது

மன்னார் மாவட்டத்தின் ஓய்வூதியம் பெறுவோர் தானாகவே முன்வந்து சங்கத்தில் இணைந்து மாதாந்தம் வழங்கும் நூறு ரூபாயைக் கொண்டு எமக்கென ஒரு அலுவலகத்தை கட்டியெழுப்புகின்றோம் என்றால் அது எமது ஒற்றுமையைக் காட்டுகின்றது என சங்கத்தின் தலைவர் எஸ். சூசைதாசன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் அரச ஓய்வூதியம் பெறுவோரின் சங்கத்தின் 35 வது வருடாந்த பொதுக்கூட்டம் வியாழக்கிழமை (16) மன்னார் நகர சபை மண்டபத்தில் இதன் தலைவர் எஸ். சூசைதாசன் தலைமையில் இடம்பெற்றபோது அவர் தனது உரையில்;

2018 ஆம் ஆண்டு இச் சங்கத்தில் 612 நபர்கள் மாத்திரமே இணைந்திருந்தனர். ஆனால் இன்று இச் சங்கத்தில் 842 பேர் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள்.

அனைவரினதும் தூரநோக்கின் சிந்தனையில்தான் இன்று இச் சங்கம் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்லுகின்றது.

எமக்கென்று ஒரு நிரந்தர அலுவலகம் மண்டபம் அற்ற நிலையில் இப்பொழுது ஒரு நிரந்தர கட்டிடத்துக்கான வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

எமக்கென்று ஒரு அலவலகமும் ஒரு பெரிய மண்டபத்துக்கான அடிக்கல் கடந்த மாதம் 5 ந் திகதி (05.02.2023) அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது இதற்கான கட்டுமானப் பணி இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

நீங்கள் அண்மைகாலத்திலிருந்து மாதம் தலா 100 ரூபா இக் கட்டிடத்துக்கான நிதியை அனுப்பிக் கொண்டு இருக்கின்றீர்கள். இந்த சிறிய தொகை இதுவரை எமக்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 400 ரூபாவாக எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த தொகை எமக்கு பெரும் பணமாக கிடைத்துக் கொண்டு வருகின்றமையால் இக் கட்டிடத்தை நிர்மானிக்கக் தொடங்கியுள்ளோம்.

தொடர்ந்து இவ் உதவி எமது சங்கத்துக்கு கிடைக்குமாகில் நாம் தொடர்ந்து எமக்கென ஒரு நிலையான சொத்தை பெற்றுக் கொள்வதற்கான நிலை உருவாகுமென தெரிவித்தார்.

சிறுதுளி பெரும் வெள்ளமாக கிடைப்பதால் சங்கத்தின் குறை நீக்கப்படுகின்றது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)