சிங்கள பெளத்த மயமாக்கல் உள்ளதா?

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிங்கள பெளத்த மயமாக்கல் உள்ளதா?

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கின்ற பாதுகாவலர்கள் என்று மட்டக்களப்பிலுள்ள இரு இராஜாங்க அமைச்சர்கள் அடிக்கடி மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களது பொதுசனப்பெரமுன ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மயமாக்கல் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்த விடயத்தில் இரு இராசாங்க அமைச்சர்களும் கண்களை மூடிக் கொண்டு, வாய்களைத் திறக்காமல் இருந்து வருகின்றனர். கிழக்கு ஆளுனர் தனது சிங்கள மயமாக்கலுக்கான 'வியத்மக' வேலைத்திட்டத்தைத் தொடந்தும் செய்து வருகின்றார்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது வரும் சிங்கள மயமாக்கல் பற்றி அவர் மேலும் கேள்வி எழுப்புகையில்;

ஏறாவூரிலுள்ள பழம்பெரும் சந்தையினை சிங்களவர்களுக்கான சந்தை என்று ஆளுனர் குறிப்பிடுவதாக அறிய முடிகின்றது. ஆனால், மட்டக்களப்பில் ஒரு வீதத்திலும் குறைவான சிங்களவர்களே உள்ளனர். அந்தப் பழைய சந்தை இதுவரை திறக்கப்படாமல் காடு மண்டிக் கிடக்கிறது. சந்தை இல்லாமல் தமிழர்கள் நடைபாதைக்கு அருகில் மரக்கறிகள், மீன்களை விற்று வருகின்றனர். ஏறாவூர் சந்தையைத் திறப்பதில் கிழக்கு இருப்பர்கள் என்னும் இனப் போலியர்கள் பாராமுகமாக உள்ளனர். மேலும், ஏறாவூரிலுள்ள பாரம்பரியமான புன்னைக்குடா வீதியை சிங்களப் பெயரிட ஆளுனர் நடவடிக்கை எடுப்பதாக அறிய முடிகின்றது.

இவற்றை விட மைலத்தனை, மாதவனைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்வதற்கு இதே ஆளுனர் செயற்பட்டுள்ளார். அதேபோல் வடமுனை நெடியகல்மலை, கெவுளியாமடு, காரமுனை, குசலானமலை, கண்ணியா, திருக்கோணேசர் ஆலயக் காணிகள் என்று பல இடங்களில் சிங்கள மயமாக்கல் பெளத்த மயமாக்கல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் வடக்கிலும் தமிழர் கலாசார அழிப்புகள் தொடர்கின்றன. வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத் தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. குருந்தூர் மலையில் நீதிமன்றத் தடை உத்தரவை மீறி, சட்ட விரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

புனிதமான புத்தரின் சிலைகள் மதவெறியர்களின் ஆக்கிரமிப்புக் குறியீடாக மாற்றப்பட்டுள்ளன. புத்தர் சிலை இனமோதலுக்கான அடையாளக் குறியீடாக மாறியுள்ளது. அன்பைப் போதித்த புத்தரின் சிலைகள், அராஜகரின் ஆக்கிரமிப்பு எல்லையின் நடுகற்களாக மாற்றப்பட்டுள்ளன. புத்தர் உயிர்த்து இலங்கை வந்தால், மதவெறியர்களுக்கு அதியுச்ச தண்டனையைக் கொடுக்கவும் தயங்க மாட்டார். அந்தளவுக்கு பெளத்தத்தின் கெளரவம், புனிதம் மறைக்கப்படுகிறது.

இவற்றைத் தடுப்பதை விடுத்து பேரினவாத ஆட்சியாளர்களுக்குத் தலையாட்டிப் பிழைப்பதே தமது கடமை என்ற வகையில், மட்டக்களப்பில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் செயலாற்றுகின்றனர். மட்டக்களப்பிலுள்ள மண்வளம், காணிவளம் என்பவற்றை வியாரப் பொருட்களாக்கி தனவந்தர்களாவதில் இராஜாங்கர்கள் ஆர்வமாக உள்ளனர். அதேவேளை பேரினவாத அரசாங்கத்தினதும், ஆளுனரினதும் சிங்கள மயமாக்கள் பொறிமுறைக்குத் தலையாட்டுவதே தம் தலையாய கடமை என்று கிழக்கு இருப்புப் பிரகிருதிகள் செற்படுகின்றனர். கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தை, ஆட்சியமைத்து மூன்று நாட்களுக்குள் தரம் உயர்த்துவோம் என்ற இராஜாங்க அமைச்சர்கள், அதனைக் கெட்ட கனவாகக் கருதி மறந்து விட்டனர்.

மாறாக சிங்களப் பேரினவாத அரசுக்கு கை உயர்த்துவதைத் தமது அமைச்சுக் கடமையாக்கியுள்ளனர். பெயரளவில் இராஜாங்க அமைச்சர்களாக இருக்கின்ற இவர்கள் அடுத்து அமைச்சர்களாவது எப்படி? என்ற கனவுகளில் மிதக்கின்றார்கள். அவர்கள் சலுகைகள் என்னும் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி, பதவிகள் என்னும் பகட்டு ஆசனங்களை அலங்கரிக்கும் பொம்மையர்களாக உள்ளனர். தமிழர்களின் உரிமைகளை விற்றாவது பதவிகளைத் தக்க வைப்பதிலேயே குறியாக உள்ளனர். அடிப்படைவாத சிங்கள பெளத்த ஆட்சியாளர்கள், ஆளுனருக்கு இப்படியான தலையாட்டிப் பொம்மைகள் உள்ளவரை சிங்கள பெளத்த மயமாக்கலுக்கு எந்தத் தடையும் இருக்காது.

எனவே, சிங்கள மயமாக்கலுக்கு எதிராகப் போராட வேண்டிய கடமை முழுமையாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைகளிலும், தமிழர்களின் தலைகளிலுந்தான் சுமத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளும், சிவில் அமைப்புகளும், மக்களும் தமிழர்களுக்காகத் தமது பொறுப்புகளை ஆற்ற வேண்டியுள்ளது. பேரினவாத ஆட்சியாளர்கள், ஆளுனரின் அடிவருடிப் பொம்மைத் தலையாட்டிகளால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் விளையாது. ஆனால் அந்தப் பொம்மைகள் மட்டும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

ஊழலுக்கு எதிராகச் சட்டம் கொணரவுள்ள ஜனாதிபதி தன்னை சுற்றியுள்ள மோசடிச் செல்வந்தர்களை எப்போது இனம் காண்பாரோ தெரியவில்லை. இன வெறியர், மதவெறியர், கொள்ளையர், கொலையர், வெள்ளைவானர், கப்பக்காரர், கறுப்புச் சந்தையர், காமுகர்கள் ஆட்சியாளர்களில் இருந்து களையப்படாத வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது. இன மத வெறியர் ஆட்சியில் கொள்ளையர், கொலையர் கூட்டுப் பங்காளிகளாகி அரசியலை வியாபாரமாக்கியுள்ளார்கள். குண்டர்கள் இமைத அதிகார வெறியர்களின் சட்ட விரோத பாதுகாவலர்களாகவும் ஆகியுள்ளனர். அதனை ‘கோத்தா கோ கம’ போராட்டத்திலும், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திலும் அடையாளம் கண்டோம். கிழக்கு மாகாண ஆளுனர் பல்லினத்தன்மையான இன சமூகங்களை ஆளுகை செய்யும் தகுதியற்றவர். இவர் சிங்கள இனத்திற்கு மாத்திரம் ஆளுராக இருந்து வருகின்றார். கலைக்கப்பட்ட கோத்தாவின் நிழலுருவாக இவர் உள்ளார். இவரது பின்னணியின் பேரினவாதிகள் உள்ளனர். அவருக்கு முட்டுக் கொடுக்க இரு இராஜாங்கர்கள் கிழக்கில் உள்ளனர். தமிழ் எடுபிடிகளும், அடிவருடிகளுமே இன்றைய இனவாத ஆட்சியாளர்களுக்குத் தேவையாகவுள்ளது என்றார்.

சிங்கள பெளத்த மயமாக்கல் உள்ளதா?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)