சமூக செயற்பாட்டாளர் விபத்தில்  பலி
சமூக செயற்பாட்டாளர் விபத்தில்  பலி

அன்னாரின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் தலைவரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம் (வயது 46) நேற்று முன் தினம் நள்ளிரவு இடம் பெற்ற கோர விபத்தில் பரிதாபகரமாக பலியானார்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி வானைச் செலுத்திக் கொண்டுசென்றவேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பொலநறுவை வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.40 மணியளவில் எதிராக வந்த மரக்கறி லாறியுடன் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், திருக்கோவில் பிரதேச தம்பட்டையை வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் பரமசிங்கம் அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தில் நிர்வாக தலைவராகவும் சிவில் சமுகக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியாகவும் இருந்து பல அளப்பரிய தொண்டாற்றியவராவார்.

விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான பரமசிங்கம் ஸ்தலத்தில் உயிரிழந்தார். அருகில் இருந்த சாரதி படுகாயத்துக்குள்ளாகி பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின் ஆசனத்தில் இருந்த சுவாட் அமைப்பின் தலைமை உத்தியோகத்தர் கே. பிரேமலதன் காயங்களுக்கு உள்ளாகி அவரும் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிகந்தை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சமூக செயற்பாட்டாளர் விபத்தில்  பலி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)