
posted 13th February 2023
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர்.
பிரெஞ்சு தூதரகத்தின் அழைப்பின்பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளொட் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் பேச்சாளர் கு. சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வேந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் ஈ. பி. ஆர். எல். எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் சிறீகாந்தா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்தமையால் உடனடியாக இந்த சந்திப்பில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)