
posted 28th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சட்டவிரோத செயல்களுக்கெதிரான கலந்துரையாடல்
மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான கலந்துரையாடல் இன்று (28) செவ்வாய் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10 மணிக்கு ஆரம்பமானது.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன், பிரதேச செயலாளர்கள், சிறுவர் மற்றம் பெண்கள் தொடர்பான விடயங்களை கையாளும் திணைக்கள அதிகாரிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய கலந்துரையாடலில், சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் தொழிலாளர்கள், பாலியல் துஸ்பிரயோகங்கள், சிறுவயது கர்ப்பம், போதைப்பொருள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கட்டுப்படுத்தலில் எடுக்கப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில், போதைப்பொருள் மாணவர் மத்தியில் பரவுவுதை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், பாடசாலைகளிற்கு முன்பாக விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
ஆயினும், அவர்களை தொடர்ந்தும் சட்ட காவலில் வைத்திருக்க முடியாது எனவும், விரைவில் அவர்கள் வெளியே வந்து மேலும் அதிகளவான விற்பனையில் ஈடுபடக்கூடிய நிலையும் ஏற்படலாம் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஆனைவிழுந்தான் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வுகளின் அடிப்படையில், போதைப்பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கும்பொழுது அத்தகவல் உடனடியாக குற்ற செயல்களில் ஈடுபடுவபவர்களிற்கு பொலிசாரால் தகவல் வழங்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் விற்பனைக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி குறிப்பிட்டார்.
இது குறித்த விடயத்தை மறுக்கவில்லை எனவும், தமது வாகன இலக்க தகடு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் வசம் உள்ளது. அதேவேளை, அவ்வாறானவர்களை கைது செய்தால் குறுகிய குற்ற தொகையுடன் வெளியே வந்து வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அவ்வாறான தகவல்களை தமது தனிப்பட்ட இலக்கங்களிற்கு வழங்குமாறும் பொலிசார் இதன்போது தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)