
posted 22nd March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
குவாஸி நீதிபதியாக நியமனம்
நிந்தவூர்ப் பிரதேச குவாஸி நீதிபதியாக எம்.ஐ. முகம்மட் இல்யாஸ் இம்மாதம் முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிந்தவூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான குவாஸி இல்யாஸ் ஹேலீஸ் அக்றோ நிறுவனத்தின் விற்பனை மேம்பாட்டு முகாமையாளராக 12 வருடங்கள் சிறப்புறப் பணியாற்றி வந்ததுடன், தற்சமயம் ஹில்மாஸ் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.
நிந்தவூர் அல் - அஷ்றக் தேசியப் பாடசாலையின் பழைய மாணவரான இவர் மேற்படி பாடசாலையின் பழைய மாணவர் சங்க முக்கிய உறுப்பினராகவும், மேலும் பிரதேச பொது அமைப்புக்களின் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.
மேலும், நிந்தவூர்ப் பிரதேசத்திற்கென புதிய நிர்ந்தர குவாஸி ஒருவர் தற்சமயம் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பொது மக்கள் பெரு மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், புதிய குவாஸி நீதிபதி இல்யாஸுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக நிந்தவூருக்கான குவாஸி நியமனம் இடம் பெறாது சம்மாந்துறை குவாஸியின் பதில் கடமைக்கு உட்பட்டிருந்ததால், நிந்தவூர் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்தனரென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)