
posted 23rd March 2023
தூங்கிடும் நம் உறவுகளின் துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை
கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை நாளை (24) திறந்துவைக்கப்படவுள்ளதாக செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை சிவபூமி அறக்கட்டளையினால் நிறுவப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை நாளை (24) சம்பிரதாயபூர்வமாக திறந்த வைக்கப்படவுள்ளது. மூவாயிரம் தமிழ் பாடல்கள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப் பெட்டகமான திருமந்திரத்தை கையால் உளிகொண்டு மூன்று வருடங்களாக இளைஞர்கள் கருங்கல்லில் செதுக்கியுள்ளனர்.
இந்தப் பாடல்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதியில் அமைக்கப்பட்டுள்ள திருமந்திர அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
108 சிவலிங்கமும், நடுவில் கருங்கல்லினால் ஆக்கப்பட்ட கோவிலில் முகலிங்கப்பெருமானும் கிழக்கிலங்கையில் முதல்முதலாக வித்தியாசமான முறையில் காட்சியளிக்கின்றன என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)