
posted 20th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் தின நிகழ்வு
கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் தின நிகழ்வு சனி அன்று, 18.03.203, இடம்பெற்றது. குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் விவேகாநந்தாநகர் பகுதியில் அமைந்துள்ள மகாசக்தி பெண்கள் சம்மேளன அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதுடன், மாவட்டத்தில் உள்ள பல்துறைகளில் விளங்கும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறு தொழில் முயற்சியாளர்களாக விளங்கும் பெண்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் சந்தையும் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)