
posted 24th March 2023

அன்னாரின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு மரணம்
மகனின் கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம், மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கினார் என குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டைப் பதிவு செய்த அவர், தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியேறி, கல்லடியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.
18ஆம் திகதி குறித்த விடுதியிலிருந்து வெளியேறிய அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 21ஆம் திகதி மரணமடைந்துவிட்டார் என வைத்தியசாலை நிர்வாகம், காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளரான 65 வயதுடைய கடுசப்பிள்னை கருணாகரன் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
இதனையடுத்து காத்தான்குடி பொலிஸார், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சகிதம் மரணமானவரின் வீடு மற்றும் தங்கியிருந்த தனியார் விடுதி போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன், போதனா வைத்தியசாலையில் வைக்கபபட்டுள்ள சடலத்தையும் நீதவான் பார்வையிட்டு, பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)