
posted 15th February 2023
கருணா என்று அறியப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸாரின் விசாரணயில் தெரிய வந்துள்ளது.
மட்டக்களப்பு - மணிவாசகர் நகரை சேர்ந்த 53 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
வனவிலங்குகளிடமிருந்து நெற்செய்கையை பாதுகாக்க மட்டக்களப்பு - தொப்பிகலவில் உள்ள வயல் காணியில் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்தார்.
இந்த வயல் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமானது என்று பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)