
posted 8th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்று 241ஆம் இராணுவ படைப்பிரிவு முகாமின் தேநீர்ச்சாலை முன்பாக அதிகாலை வேளையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
கார் வீதியை விட்டு விலகி, வீதி அருகில் இருந்த சிறிய தூண்களை உடைத்துக்கொண்டு சிறிய பள்ளமான பிரதேசமொன்றில் தலைகீழாக வீழ்ந்தது.
காரின் இரு பக்க இலக்கத் தகடுகளும் காணப்படாத நிலையில், காரின் முன்பகுதி மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. காரின் சில பாகங்கள் சிதறி கிடந்தன.
இதில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், குறித்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)