
posted 12th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கவனவீர்ப்புப் போராட்டம்
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கண்ணகி கிராமம், கபடாப்பிட்டி, புளியம்பத்தை, அளிக்கம்பை, சாந்திபுரம் கிராமங்களில் உள்ள மக்களை யானைகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுமாறு கோரி கிராம மக்கள் பிரதேச செயலகத்தின் முன்னால் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னால் ஒன்றிணைந்தனர்.
இதன்போது;
> காட்டு யானைகளில் இருந்து எமது உயிர்களை காப்பாற்று
- மின்சார வேலி அமை
- யானைகளின் அட்காசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கு
- வாழவிடு எமது ஊரில் வாழவிடு
- யானைகளின் அட்காசத்தை நிறுத்த உடன் நடவடிக்கை எடு
- வனஜீவி உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைகளை காடுகளுக்கு அப்புறப்படுத்தி மக்களை அச்சத்திலிருந்து மீட்டுத் தா
- காட்டுயானை பிரச்னைக்கு தீர்வாக யானை வேலி அமைத்துத் தா
போன்ற வாசகங்களைக் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு கேஷங்கள் எழுப்பி சுமார் ஒரு மணித்தியாலம் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)