
posted 12th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கசிப்புடன் இருவர் கைது
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை - இருவர் கைது
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (10) வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீலாப்புலம் பகுதியில் வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீலாப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவர் 4500 மில்லிலீட்டர் கசிப்பு மற்றும் வாள் ஒன்றுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே நேரம் அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் 3000 மில்லிலீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
உதவிப் பொலிஸ் பரிசோதகர் அசேல வத்துக்கார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சான்றுப் பொருட்களுடன் பாரப்படுத்தப்பட்டனர்.
அவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)