
posted 31st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது...
ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாத்திரம் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாலோ எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது.
இவ்வாறு அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்கள் ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்ற எடுத்த நடவடிக்கையில் மூக்குடைபட்டார்.
ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் வெளிவந்த வீடியோ காட்சியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் என்னை விமர்சிக்கும் தொனியில் பேயாட்டம் ஆடி இருந்தார்.
கௌரவ சாணக்கியன் அவர்கள் முடியுமானால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு சூறையாடபட்டு இன்னும் கள்வர்களுடைய கையில் இருப்பதை வாய் திறந்து பேச முடியுமா??
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுக்கு தைரியம் இருந்தால் சிறுபான்மை சமூகத்திற்காக பேசவேண்டும் என்றால் உங்களுடைய நடிப்பை மூட்டை கட்டி விட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு இருந்து 240 சதுர கிலோமீட்டர் காணியையும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் இருந்த 176 சதுர கிலோமீட்டர் காணியையும் முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு கொடுக்க பேச முடியுமா??
அதேபோல் காத்தான்குடி பூநொச்சிமுனையினை மட்டக்களப்பு மண்முனை பிரதேச சபைக்கு இணைத்து வைப்பதனை காத்தான்குடி பிரதேச சபைக்கு இணைக்க வேண்டும் என்று பேச முடியுமா??
காத்தான்குடி அண்டிய பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காணிகளையும் ஏப்பமிட்ட நிலையில் இருக்கின்ற நிலையை சாணக்கியன் வாய் திறந்து பேச முடியுமா??
தளவாய் முஸ்லிம் எல்லைக் காணிகளை பிரித்ததை மீண்டும் முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டும் என பேச முடியுமா??
மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடமா? முடிந்தால் திட்டமிட்டு களவாடிய இக்காணிகளையும் முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்க உங்களால் பேசமுடியுமா??
கௌரவ சாணக்கியன் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் முடிந்தால் முஸ்லிம்களிடம் இருந்து களவாடிய அத்தனை காணியையும் முஸ்லிம்களுக்கு கொடுப்பதுதான் நியாயம் என்று உண்மையையும் சத்தியத்தை உரத்து இந்த நாட்டுக்கு சொல்லுங்கள்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)