
posted 22nd March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
எடுத்துரைக்கப்பட்ட கிழக்குப் பகுதி தமிழ் மக்களின் பிரச்சனைகள்
திங்கள் கிழமை (20) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தினருக்கும் தேசிய கிறிஸ்தவ குழுவினருக்குமான சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இச் சந்திப்பானது மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் நோக்கமாக இலங்கை தேசிய கிறிஸ்தவ பிரஜைகளும், இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினூடாக வருகை தந்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும், ஐயர்லான்ட் நாட்டைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியுமாக இணைந்து தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர் கொள்ளுகின்ற பிரச்சனைகள், இவர்களுக்கு இருக்கின்ற இடறான, இக்கட்டான சூழ்நிலைகள் மற்றும் சிவில் சமூகப் பிரச்சனைகளை பல் சமய குழுவினரிடம் கேட்டறியும் கலந்துரையாடலாக இருந்தது.
இவ்வமர்வு பல் சமய குழுவின் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் ஆலோசகர் ஹெகட் ஹரிதாஸ் நிறுவனத்தின் இயக்குனரான அருட்பணி யேசுதாசன் அடிகளார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் பங்களிப்புடனும் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்ற பொது செயலாளர் அருட்பணி சிவநாயகம் அடிகளார், இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் செயற்பாட்டாளரான கலாநிதி எலிசபெத் ஹரீஸ் அவர்களும், இவருடன் ஐயர்லான்டிலிருந்து வந்திருந்த செல்வி நிக்கிலோவும் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில், மட்டக்களப்பு பகுதியில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பலதரப்பட்ட பிரச்சனைகள் இவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக போருக்கு பிற்பாடு இவ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் பற்றி இவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
அத்துடன் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் தொடர்பான ஒரு மகஜரும் இவர்களிடம் கையளிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)