
posted 27th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கல்விக்கு உதவித் தொகையும் , உலர் உணவுப் பொதியும்
தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் 60 வறிய மாணவர்களுக்கு 01ம் தவணைக்குரிய கல்வி உதவித்தொகையும் மற்றும் உலர் உணவுப் பொதியும் வழங்கப்பட்டது.
அத்துடன் மாணவர்களின் மதிப்பீடுகள் மீளாய்வு செய்யப்பட்டு அவர்களுக்கான வழிகாட்டலும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் ம.து.ம.ச ஆலோசகர் வண.பிதா.அ. சேவியர் குரூஸ் அடிகளார், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர் கலந்து சிறப்பித்துள்ளனர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)