
posted 21st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் மதமாற்றிகள்
மதமாற்ற சபை ஒன்று உடுவிலில் விளையாட்டு திடலில் மதமாற்ற முயற்சிக்கான கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு உரிமம் பெறுகிறதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.
அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
முதல்வர் சைவப் புலவர் பரமேசுவரன் கிறித்துவ மதமாற்ற சபையினருக்கு, சைவப் பாடசாலைக்குள் மதமாற்றும் முயற்சிக்கான கூட்டம் நடத்த உரிமம் கொடுத்துள்ளார்.
இது குறித்து சிவ சேனைக்குச் செய்தி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிவசேனைத் தொண்டர்கள் அங்கு சென்று வித்தியாசாலையைச் சுற்றிச் சுவரொட்டி ஒட்டினார்கள்.
இது குறித்து, சிவன் கோயிலாருடன் சிவசேனை அமைப்பினர் சுன்னாகம் காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட்டனர். அந்தவகையில் போதகரை அழைத்த காவல் நிலையத்தினர் கூட்டத்தைத் தடை செய்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)