
posted 28th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
'ஈழத்து ஞானக் குழந்தை'
ஐந்து வயதில் திருக்குறள்களைக் கூறி அதற்கு விளக்கமும் கொடுத்த சிறுவனான சுதர்சன் அருணனுக்கு ருத்ரசேனை அமைப்பு 'ஈழத்து ஞானக் குழந்தை' என்று சிறப்பு விருது அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொஸ்தாபிள் சுதர்சனின் புதல்வருக்கே ஞாயிறு (26) தினம் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற திருவள்ளுவர் உருவ வெளியீட்டு விழாவில் இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் சிறுவன் அருணன் 'திருவள்ளுவரின் ஆதங்கம்' எனும் தலைப்பில் திருக்குறள் மற்றும் அதன் விளக்கம் என்பன எடுத்துரைத்தார்.
தொடர்ச்சியாக சிறுவன் இந்து சமய விழுமியங்களை நிலைநிறுத்தி பல்வேறு சமய சார் சொற்பொழிவுகளை மேற்கொண்டு அனைவராலும் பாராட்டுகளை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)