
posted 10th March 2023
துயர் பகிர்வோம்
இலஞ்ச ஊழலில் பொறுப்பதிகாரி கைது
கல்முனை தனியார் பஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பஸ் சாரதி ஒருவரிடம் 200 ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த பொறுப்பதிகாரி, பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இல்லாமல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுதற்கு பஸ் சராதிகளிடம் தொடர்ச்சியாக இலஞ்சம் வாங்கி வருவதாக இலஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நடத்துநருக்கு வழங்கிய ஆலோசனைக்கமைய, சம்பவதினமான நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு சாரதியிடம் 200 ரூபாய் இலஞ்சமாக பஸ் நிலையப் பொறுப்பதிகாரி வாங்கியபோது, அங்கு மாறு வேடத்தில் இருந்த இலஞ்ச ஓழிப்புப் பிரிவினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதில் கைதுசெய்யப்பட்ட அவரை, கொழும்புக்கு அழைத்துச் சென்று, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)