
posted 3rd February 2023
இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக நிந்தவூரைச் சேர்ந்தவரும், மதீனா விளையாட்டுக் கழக தலைமை வீரருமான அஸ்லம் சஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு அமைச்சில் அண்மையில் நடைபெற்ற தெரிவின்போது அஸ்லம் சஜாவின் தலைமை பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்லம் சஜாவின் தலைமையிலான அணி எதிர்வரும் மார்ச் 11ந் திகதி தொடக்கம் 22ந் திகதிவரை பங்களாதேஷ் நாட்டில் நடைபெறும் பங்கபந்து சர்வதேச கபடிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ளும்.
இலங்கையின் விளையாட்டுத்துறை தேசிய அணியொன்றுக்கு நிந்தவூரைச் சேர்ந்த வீரர் ஒருவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டமை நிந்தவூருக்கு பெருமையளிப்பதாகும்.
மேற்படி அணியில் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரர்களான ஸபிஹான், முஹம்மட் நப்ரீஸ் ஆகிய இரு வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விளையாட்டுத் துறையில் தேசிய அணி ஒன்றுக்கு நிந்தவூரைச் சேர்ந்த வீரர் ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
தேசிய கபடி அணியின் தலைவர் அஸ்லம் சஜாவுக்கும் மற்றும் வீரர்களான சபிஹான் முஹம்மட் நப்ரீஸ் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் உட்பட பல்வேறு அமைப்புக்களும் பெரும் பாராட்டுதலை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)