
posted 4th February 2023
இலங்கை சுதந்திரம் பெற்ற அன்று மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பிறந்த இரு சிரேஷ்ட பிரஜைகளுக்கு தங்கள் 75வது ஆண்டு பிறந்த தினம் இன்றையத் தினம் கொண்டாடப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற சுதந்திர தினத்தன்று இவ் சிரேஷ்ட பிரஜைகளான திரு அந்தோனிப்பிள்ளை மற்றும் திருமதி அந்தோனி செபமாலை ஆகியோருக்கு அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நான்கு மதத் தலைவர்கள் ஆசீருடன் சுதந்தின தின மேடையில் வைத்து கேக் வெட்டி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசில்கள் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)