
posted 1st February 2022
வடமராட்சிப் பிரதேசத்தில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டாவது நாளாக மீனவர்களின் ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்றது.
வடமராட்சி வடக்கு பருத்திததுறை சுப்பர்மடத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது ஆர்ப்பாட்டம் இன்றும் நீடித்தது. கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று இருவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினம் 31/01/2022 சடலமாக ஆழியவளை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை மருதங்கேணியில் உள்ள வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் எவரும் உள்ளே செல்லாத வகையில் முடக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கண்டனப் போராட்டமானது, இரண்டு மீனவர்களின் மரணத்திற்கு நீதிகோரி நடைபெற்றது.
இக்கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
இறந்த உறுவுக்கு நீதி வேண்டும்
அரச அதிகாரிகளே திரும்பிப்பார்
மீனவர்கள் வயிற்றில் அடிக்காதே!
உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து
தமிழர்கள் என்றால் அனாதைகளா?
மீனவர் வாழ்க்கை யார் கையில்?
எமக்கு எமது கடல்வேண்டும்
போன்ற கோசங்களை எழுப்பிக் கொண்டு பிரதேச செயலக அதிகாரிகஉள்ளே செல்லாதவண்ணம் வழிமறித்து கோஷம் எழுப்பியவண்ணம் இருந்தனர்.
காலை 7 மணிக்கு ஆரம்பமான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நண்பகல் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தார். அவருக்கு போராட்டத்தில் ஈடுபட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருந்தும் அமைச்சர் மீனவர்களுடன் கலந்துரையாடினார். தான் ஜனாதிபதி, பிரதமர் இந்திய தூதுவருடன் கலந்துரையாடி பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என அமைச்சர் தெரிவித்தபோதும் அது தொடர்பில் எழுத்து மூலமாக தமக்குத் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமைச்சரிடம் கேட்டிருந்தனர். ஒரு நம்பிக்கையில் தான் இந்த உறுதிமொழியை தெரிவிக்கிறேன் என கூறிவிட்டு அமைச்சர் திரும்பிச் சென்றுவிட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த இருவரினதும் இறுதிக்கிரியைகள் நடைபெற இருப்பதால் இறுதிக்கிரியை முடித்து வைப்பதற்காக இப்போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தவுடன் கடற் தொழிற்சங்கங்கள் மாபெரும் ஒரு போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதாக கடற் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House