
posted 7th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் பெண்களின் பெருமை மரியாதை மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் அவள் நாட்டின் பெருமை என்ற தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இலங்கை சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமான பெண்களின் பிரதிநித்துவம் உலகின் வளர்ச்சியடைந்த நாடகளின் சமூக மேம்பாட்டுக் குறியீட்டிற்குள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. எழுத்தறிவில் முன்னனியில் திகழும் இலங்கைப் பெண்கள் இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்சார் ரீதியாக வழங்கும் பங்களிப்பும், சக்தியும் விஷேடமானது.
இலங்கை பெண்களின் இந்த பல்துறை பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி திடமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்தில் இந்நாட்டு பெண்களின் உச்ச பங்களிப்பைப் பெறவே இலங்கையின் மகளிர் விவகார அமைச்சை தற்காலிகமாக எனது பொறுப்பில் எடுக்கக் காரணமாகும்.
நிர்வாக மற்றும் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் பொறிமுறைக்குள் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன் பாராளுமன்றத்தில் மட்டுமன்றி அரச தனியார் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க விரிவான திட்டங்கள் நடைமுறைப்படுத்தபட்டுள்ளன.
அதிகத் திறமையுள்ள பெண்களை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு முழுமையான பங்களிப்பை பெறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. நவீன உலகத்தில் பெண்களின் பங்களிப்பை சரியாக புரிந்து கொண்டு இதில் பங்களிப்புச் செய்யக்கூடிய பெண்களை எமது நாட்டில் வலுவூட்டுவது இந்த பணிகளின் நோக்கமாகும்.
நாட்டில் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும் 2018 அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை வெற்றியடையச் செய்ய இந்நாட்டின் அனைத்துப் பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து இம்முறை சர்வதேச மகளிர் தினத்திற்கான எமது மனப்பூர்வமான வாழ்த்துக்ளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)