இந்திய இணையமைச்சரும் இ.பா.ஜ.கட்சியின் தலைவர் திருக்கேதீஸ்வரத்துக்கு விஜயம்

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இணையமைச்சர் மற்றும் அவருடன் இணைந்து வந்துள்ள இ.பா.ஜ.கட்சியின் தலைவரும் மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய தகவல் ஒலிபரப்பு , மீன்வளம் , கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் அவர்களும், இ.பா.ஜ.கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை அவர்களும் வெள்ளிக்கிழமை (10) காலை இவ் விஜயத்தை மேற்கொண்டனர்.

இவர்களுடன் யாழ் இந்திய இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் அவர்களும் கலந்து கொண்டார்.

திருக்கேதீஸ்வரம் ஆலயம் வருகை தந்திருந்த இவர்களை திருக்கேதீஸ்வரம் ஆலய செயலாளர் எந்திரி எஸ்.எஸ். இராமகிருஷ்ணன் அவர்களும் இவ் ஆலய பரிபாலகர் சபை உறுப்பினர்களும் வரவேற்றனர்.

இவர்கள் இங்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதுடன் கடந்த ஏழு வருடங்களாக இந்திய அரசின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆலய புனருத்தான கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டனர்.

அத்துடன் இவ் ஆலய நிர்வாகத்தினருடனும் இக் குழுவினர் கலந்துரையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய இணையமைச்சரும் இ.பா.ஜ.கட்சியின் தலைவர் திருக்கேதீஸ்வரத்துக்கு விஜயம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)