இடித்து அழிக்கப்பட்ட அரை நூற்றாண்டு பஸ் தரிப்பு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இடித்து அழிக்கப்பட்ட அரை நூற்றாண்டு பஸ் தரிப்பு

சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட மீசாலை சந்தியில் உள்ள 50 வருடங்கள் பழமையான பயணிகள் தரிப்பிடத்தை சாவகச்சேரி நகரசபை முற்றாக இடித்து அழித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மீசாலை சந்தியில் பழைய புகையிரத நிலையம் அமைந்திருந்த காலத்தில் இருந்து தென்மராட்சி மக்களின் வாழ்வியலோடு ஒன்றித்திருந்த பயணிகள் தரிப்பிடமே நேற்று வியாழக்கிழமை காலை சாவகச்சேரி நகர சபையால் இடித்து அழிக்கப்பட்டது.

1995 இடப்பெயர்விலும், யுத்த காலத்திலும், அதற்கு முன்னரும் யாழ்ப்பாண மக்களின் பல்வேறு வரலாற்று உணர்வுகளின் அடையாளமாக குறித்த பேருந்து தரிப்பிடம் விளங்கியது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பயணிகள் தரிப்பிடம் ஏ - 9 பிரதான வீதி அகலிக்கப்பட்டபோதும், புகையிரத பாதை அமைக்கப்பட்ட போதும் இரண்டு திணைக்களங்களாலும் இடித்து அகற்றப்படாதிருந்தது. ஆனால் சாவகச்சேரி நகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டு 10 நாட்களுக்குள் மீசாலையின் அடையாளமாக திகழ்ந்த பயணிகள் தரிப்பிடம் அழிக்கப்பட்டமை தென்மராட்சி மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏ9 வீதியில் சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழமைவாய்ந்த பேரூந்து தரிப்பிடங்கள் நகரசபையால் இடித்து அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடித்து அழிக்கப்பட்ட அரை நூற்றாண்டு பஸ் தரிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)