
posted 11th March 2023
துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம்
ஆளுமைகள் கௌரவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஹலோ எப்.எம். நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வு திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி எப்.எம். சரீக் தலைமையில் இடம்பெற்ற இந்த மகளிர் தின நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் பெண் ஆளுமைகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியபதி கலபதி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே. முரளிதரன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ. திசாநயக்க ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், சிறப்பு அதிதிகளாக திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன், சர்தாபுர விஷேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.ஆர். குணசேகர ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஹலோ எப்.எம். நிறுவனத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற சர்வதேச மகளிர் தினத்தில் பல்துறைகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றமையும், இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறையைச் சேர்ந்த 150 தமிழ், முஸ்லிம் பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன்போது மகளிர்களினால் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதும் விஷேட அம்சமாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)