ஆரம்பமான 'வடக்கின் பெரும்போர்'

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஆரம்பமான 'வடக்கின் பெரும்போர்'

வடக்கின் பெரும்போர் பெருந்துடுப்பாட்டப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் 279 ஓட்டங்களை குவித்துள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் சென். ஜோன்ஸ் கல்லூரி 3 விக்கெட்கள் இழப்புக்கு 43 ஓட்டங்களுடன் தடுமாறி வருகிறது.

‘வடக்கின் பெரும்போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி - யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் மோதும் பெருந்துடுப்பாட்ட போட்டி நேற்று (09) வியாழன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

116ஆவது ஆண்டாக நடக்கும் இந்தப் பெருந்துடுப்பாட்டப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரியின் அணித் தலைவர் சபேசன் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார். இதனால், முதலில் துடுப்பெடுத்தாடியது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.

மத்திய கல்லூரிக்கு விதுசன், சிமில்ரன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இவர்களின் இணைப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிமில்ரன் 7 ஓட்டங்களுடன் யோ. விதுசனின் பந்துவீச்சில் கிந்துசனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த சஞ்சயன் விதுசனுடன் இணைந்து நிதானம் காட்டினார். இந்த நிலையில், விதுசன் தனது துடுப்பாட்டத்தை சற்று வேகப்படுத்தினார். அரைச்சதம் கடந்து அபாரமாக ஆடிய விதுசன் 6 பௌண்ட்ரிகள், 5 சிக்ஸர்களுடன் 102 பந்துகளில் 71 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

சஞ்சயனுடன் இணைந்த போல் பிறேமதயாளன் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த அஜய் நிதானம் காட்டினார். இதனிடையே, 6 பௌண்ட்ரிகளுடன் 84 பந்துகளில் 42 ஓட்டங்களை சேர்த்த சஞ்சயன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நியூட்டன் 0, அணித் தலைவர் கஜன் 5, சயந்தன் 11, அபிலாஷ் 15, அனுசாந்த் 27 என வேகமாக விக்கெட்களை பறிகொடுத்தனர்.

மறுமுனையில் நிலைத்து அபாரமாக ஆடிய அஜய் 77 பந்துகளில் 8 பௌண்ட்ரிகள் 2 சிக்ஸர்களுடன் 74 ஓட்டங்களை குவித்து இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

66.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் விதுசன் 4 விக்கெட்களையும் அபிசேக் 3 விக்கெட்களையும் கஜகர்ணன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு தனது முதல் இனிங்ஸை தொடங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு நேசகுமார் ஜெஷீல், அண்டர்சன் சச்சின் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். சச்சின் 6 ஓட்டங்களுடன் வெளியேறவே, அடுத்த வந்த கிந்துசன் ஒரு பௌண்ட்ரி, ஒரு சிக்ஸருடன் 11 ஓட்டங்களை விளாசிவிட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜனத்தன் ஓட்டம் எதுவும் பெறாமலேயே வெளியேறினார்.

நேற்றைய நாள் ஆட்டம் முடிவில் 17 ஓவர்களை சந்தித்த சென். ஜோன்ஸ் கல்லூரி 3 விக்கெட்கள் இழப்புக்கு 43 ஓட்டங்களை எடுத்திருந்தது.

ஜெசீல் 16 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சபேசன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

யாழ். மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் அனுசாந்த் 2 விக்கெட்களையும் நியூட்டன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்று (10) போட்டியின் இரண்டாவது நாளாகும்.

ஆரம்பமான 'வடக்கின் பெரும்போர்'

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)