
posted 15th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆன்மாவைக் காப்பாற்ற ஆன்மீக கல்வி மிகவும் அவசியம்
ஞாயிறு தினங்களில் ஆன்மீக வகுப்புக்கள் நடைபெறுகின்ற வேளையில் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுவதை கண்டித்து இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (15) மன்னாரில் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் ஆன்மீக கல்வியற்ற சமூகம் ஒன்று உருவாக்கப்பட்டால் எதிர்காலத்தில் இவர்கள் வன்முறைகள் சார்ந்தவர்களாகவும், பிற மதங்களை மதிக்கத் தெரியாதவர்களாகவும், சமூக கலை கலாச்சாரத்தை வெளியிட முடியாதவர்களாகவும் தோன்றாதிருக்க ஞாயிறு தினங்களில் ஆன்மீக மையங்கள் சிறப்பாக அமையப்பெற யாவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேசகீர்த்தி சிவஸ்ரீ மஹாதர்மகுமாரக் குருக்கள் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;
ஞாயிறு தினங்களில் நடைபெறுகின்ற ஆன்மீக அறநெறி வகுப்புக்கள் நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுவதனால் அறநெறி பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிகக் குறைவாக காணப்படுகின்றது. அவ்வாறு அறநெறி பாடசாலைகளுக்குரிய நேரத்தில் நடைபெறும் பிரத்தியேக வகப்புகளை நிறுத்துமாறு பலமுறை அரச அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித பலனும் கிட்டவில்லை. அதே நிலைதான் இப்பவும் இருக்கின்றது.
மாணவர்களின் ஆன்மீக கல்விக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைவரையும் எம்முடன் ஒத்துழைப்புத் தருமாறு கோரியே இக் கவனயீர்ப்ப போராட்டத்தை இன்று (15 வியாழக்கிழமை) முன்னெடுத்துள்ளோம்.
இவ்வாறான பிரத்தியேக வகுப்புகள், அறநெறி பாடசாலையை மட்டுமல்ல, கத்தோலிக்கர்களால் இந்நாட்களில் நடாத்தப்படுகின்ற மறைக்கல்வி மற்றும் ஏனைய சமயத்தவர்களின் நடத்தப்படும் ஆன்மீக கல்விகளுக்கு இடையூறுகளை எற்படுத்தி வருகின்றது.
எனவே, அனைவரும் ஒத்துளையுங்கள். சமுதாயத்தைச் செம்மைப்படுத்துங்கள்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)