அரிசி விநியோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

அரிசி விநியோகம்

அரசின் புதிய எழுச்சித் திட்டத்துக்கமைய புதுவருடத்தையொட்டி களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் வருமானம் குறைந்த சுமார் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் 2022/2023 பெரும்போக நெல் கொள்வனவு மற்றும் அரிசி விநியோக தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அரிசி விநியோகம் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது.

2022/2023 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் நெல் கையிருப்பை அரிசியாக்கல் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி அடையாளம் காணப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிகழ்வு களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஜனாதிபதி பங்கேற்புடனான தேசிய நிகழ்வுக்கு சமாந்தரமானதாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 13,429 குடும்பங்கள் இத் திட்டத்தில் பயனடைய உள்ளனர்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமூக சேவை உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லானது தெரிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகளுக்கு வழங்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் அரிசி 10 கிலோ கிராம் பைகளாக பொதி செய்யப்பட்டு மாதமொன்றுக்கு 10 கிலோ எனும் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு அடையாளம் காணப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரிசி விநியோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

அரிசி விநியோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
அரிசி விநியோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
அரிசி விநியோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
அரிசி விநியோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More