அம்பாறையில் திடீர் மழை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அம்பாறை மாவட்டத்தில் கடந்த திங்கட் கிழமை (27) முதல் திடீரென பெருமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பாக விவசாயிகள் பெரும் அவலங்களுக்குமுள்ளாகியுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை மும்முரமாக இடம்பெற்றுவந்த நிலையில் திடீர் மழை காரணமாக அறுவடை வேலைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள அதேவேளை விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

பொழியும் மழை நீர் வயல் நிலங்களில் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அறுவடைக்குத் தயாரான நிலையில், முற்றிவிளைந்த நெற்கதிர்கள் நீரில் அமிழ்ந்து காணப்படுகின்றன. இதனால் நெல் விளைச்சல் பாதிப்புறும் நிலையேற்பட்டுள்ளதாகவும், அறுவடை வேலைகள் தாமதமுறும் நிலமையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தற்சமயம் கடல் மீன்பிடி அதிகரித்துள்ளது. நெத்தலி, கீரி, பாரைக்குட்டி ஆகிய இன மீன்கள் கரைவலைத் தோணிகளுக்குப் பெருமளவில் பிடிபடத் தொடங்கியுள்ளதால் மீன் விலையில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

அம்பாறையில் திடீர் மழை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)