
posted 24th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அம்பாறைக்கும் உரம்
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ரி.எஸ்.பி. உரம் அம்பாறை மாவட்டத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அமெரிக்க அரசின் நிதி உதவியுடன் இலங்கையின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கென 36000 மெட்ரிக்தொன் மேற்படி உரம் அத்தியாவசியமான உதவியாக கடந்த வாரம் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது.
இதன்படி அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ரி.எஸ்.பி. உரம் தற்சமயம் கிடைக்கப்பெற்றுள்ளது.
எதிர்வரும் சிறுபோக நெற்செய்கைக்கென ஆரம்ப அடித்தட்டு உரமாக விவசாயிகளுக்கு வழங்கவென மாவட்டத்திலுள்ள பெரும்பாக உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு இந்த உரம் கிடைக்கப்பெற்று களஞ்சியப்பபடுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் மேற்படி இலவச உர விநியோகம் ஆரம்பிக்கப்படவுமுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)