அம்பாறை மாவட்டத்தில் கடும் உஷ்ணம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அம்பாறை மாவட்டத்தில் கடும் உஷ்ணம்

அம்பாறை மாவட்டத்தில் தற்போது கடும் உஷ்ணத்துடன் கூடிய கால நிலை நிலவி வருகின்றது. இதனால் மக்கள் வீடுகளில் தங்கியிருக்க முடியாமலும், வெளியில் நடமாட முடியாமலும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். தற்போதைய உஷ்ணத்துடன் கூடிய காலநிலை குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் தொழிற்பட வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தங்களது அன்றாட வெளித் தேவைகளை காலை வேளையிலேயே நிறைவு செய்து கொண்டு வீட்டில் முடங்கிவிடும் நிலமையே உருவாகியுள்ளது.

கடற்கரை மற்றும் நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் தினசரி பொழுது போக்கும் மக்கள் தொகையும் அதிகரிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இவ் உஷ்ணம் அதிகரித்துள்ள காலநிலையானது நோன்பு நோற்கும் முஸ்லிம்களுக்கு வெகு சிரமங்களையும் கொடுக்கின்றது.

எனவே, இவ் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நீர் மற்றும் நீராகாரப் பானங்களை தினசரி வழமையை விட அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என சிரேஷ்ட பிரஜைகள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக பிரதேச ரீதியாக குளிர்பானம், நீராகாரப் பானங்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதேவேளை இறைக்கும் கடும் வெயில் உஷ்ணத்திற்கு தாகசாந்தியளித்தக்கதாக வெள்ளரிப்பழம், வத்தைப்பழம் சீசனும் ஆரம்பமாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேட்டு நில பரிச்செய்கையாளர்களால் உற்பத்தி செய்யப்படும் இப்பழங்கள் அம்பாறை மாவட்டத்திற்கும் கொண்டு வரப்பட்டு அமோக விற்பனையும் இடம்பெற்று வருகின்றது. இப்பழங்களை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யும் வியாபாரிகள் தினமும் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இவ் வெப்பத்தினாலான வரட்சியுடனால் நீர்நிலைகள், ஆறுகள் குளங்கள், கிணறுகள் என்பவற்றின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கடும் உஷ்ணம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)