
posted 15th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (15) காலை நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையத்தை உத்தியோக பூர்வமாக அங்குராப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இது தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி இவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பாரிய பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கே அதிகளவில் உள்ளன.
இரண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்திலே இம் மையம் அங்குராப்பணம் செய்து வைக்கப்படுகின்றது என தெரிவித்தார்.
அதில் ஒன்று உப வேந்தரை நீக்கக் கோரி ருஹூணு பல்கலைகழகத்திலும் மற்றையது எமது கூட்டுத்தாபனம் ஒன்றின் முகாமையாளரை நீக்கக் கோரியுமே இவ் ஆர்பாட்டம் நடைபெறுகின்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து நாம் பார்க்க வேண்டும். இங்கு என்ன நடக்கின்றது என்பதை அறியும் உரிமை நாட்டுக்கு உண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எமது மக்களுக்கு கல்வி புகட்டுவதற்காக நாம் பணத்தை செலுத்துகின்றோம். எனவே பல்கலைக்கழகம் முறையாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)