
posted 16th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
19 ஆம் திகதி வரலாற்று நூல் வெளியீடும், கௌரவிப்பும்
நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமா சபையின் 84 வருடகால சேவையில் இறைபணியாற்றிய சிரேஷ்ட ஆலிம்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், இறையடியெய்திய ஆலிம்களின் வரலாற்று நூல் வெளியீடும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர்க்கிளை தலைவர் அஷ்ஷெய்க் என். இஸ்மத் (ஷர்க்கி) தலைமையில், நிந்தவூர் முஹைதீன் ஜும்ஆபெரிய பள்ளிவாசலில் நிகழ்வு நடைபெறும்.
வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளைத் தவைலவர் அஷ்ஷெய்க், எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), உப தலைவர் அஷ்ஷெய்க். ஐ.எல். ஹாஷிம் ஷரி (மதனி) நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் எஸ்.எம்.பி.எம். பாறூக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பைஸால் காசிம், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லதீப், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் நிகழ்வில் கலந்து கொள்வர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர்கிளையின் முன்மாதிரியான செயற்பாடாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு அமைப்புகளும் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)