
posted 21st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
159 வருட பொலிஸ் வீரர் தினம்
159 வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சியில் இன்று (21) இடம்பெற்றது.
1864.03.21 இதே நாளில் உயிரிழந்த பொலிஸ் உத்தியயோகத்தரான சபான் என்பவரை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு இன்று (21) பெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கலந்துகொண்டு திணைக்கள கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்த அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன், பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூரப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)